செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார். அதில், ஒரு மா நிலம் இல்லை கவலையே இல்லை திருமா இருக்கிறார் எங்களுக்கு. ஒரு மா என்றால் நூறு குழி அவங்க மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் மா கணக்கு குழிக்கணக்கு தான். இங்க நம்ம பக்கத்துல கடலூர், அரியலூர், பெரம்பலூர் அந்த பக்கம் போனால் காணி கணக்கு சொல்வார்கள். ஏக்கர் என்பது பின்னால் வந்தது.
காணி, அரைக்காணி, கால் காணி, கால் காணிக்கு கீழே போனால் அரைக்கால் காணி, அதற்கும் கீழே போனால் வீசம் என்பார்கள், 16 வீசம் வந்து ஒரு காணி, வீசம் என்று இருக்கிறது. 1 வீசம், 2 வீசம், 3 வீசம். அவங்க டெல்டா மாவட்டங்களில் 100 குழி என்பது ஒரு மா, 3 குழி என்பது ஒரு ஏக்கர், ஒரு ஏக்கர் என்றால் 100 சென்ட், 300 குழி ஒரு ஏக்கர், 100 குழி என்பது ஒரு மா, 100 சென்ட் ஒரு ஏக்கர், ஒரு ஏக்கர் அப்பா அதில் மூன்றில் ஒரு பங்கு 33 சென்ட் தான் ஒரு மா, 33 சென்ட் என்பது இங்கே சென்னையில் என்ன சொல்வார்கள் என்றால் ஐந்து சென்ட் ஒரு கிரவுண்டு என்பார்கள்,
அப்போ ஒரு 5 கிரவுண்டு இடம் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு மா என்பது.. இப்போ டெல்டா மாவட்டத்தில் ஒரு மா நிலம் இல்லை என்று சொல்கிறார். நூறு குழி கூட இடமில்லை, எங்களுக்கு கவலையில்லை திருமா இருக்கிறார். ஒரு மா நிலம் இல்லை கவலையேயில்லை திருமா இருக்கிறார். அப்படி என்றால் மொத்த நிலமும் தமிழ்நாடே எங்களுக்கு தான். ஒரு மா நிலம் தேவையில்லை திருமா இருக்கிறார் என்றால் தமிழ்நாடு எங்களது தான், தமிழ் மாநிலமே எங்களுடைய தான்.
நீ வாய் திறக்கும் போதெல்லாம் திசைகளுக்கு செவி முளைக்கிறது. எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள், கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், நீ என்ன பேசுகிறாய் எட்டுத்திக்கிலும் எல்லாரும் திருமாவளவன் என்ன பேசுகிறார் என்று பார்த்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். நம்மாட்கள் பேஸ்புக் பார்க்கிறார்களோ இல்லையோ லைவ் ஓடிக்கொண்டிருக்கிறது, சனாதன சக்திகள் எல்லாம் இப்ப லைவில் பார்த்து கொண்டிருப்பார்கள். இல்லையென்றால் பேஸ்புக்ல போய் பார்ப்பார்கள், உடனே அதுக்கு உட்கார்ந்து அதுக்கு நாலு பேர் உட்கார்ந்து பேசி இதற்கு என்ன பதிலடி கொடுக்கலாம் என்று நாராச நடையில் பதிலடி கொடுப்பார்கள்.
இப்ப நாம் அதை கண்டு கொள்வதே கிடையாது. அதை கேட்பதே கிடையாது. ஏனென்றால் அவர்கள் தரம் நமக்கு என்னவென்று தெரியும், அவங்க கருத்தியல் ரீதியாக பதில் சொன்னால் நாம் அதற்கு விடை சொல்லலாம், கருத்தியல் ரீதியாகவும் பேசுவதற்கு தயாராக இல்லை, இப்ப கருத்தியல் ரீதியாக பேசுவது அப்படி என்பது அரசியல் களத்தில அதை ஒரு விவாதமாக இன்றைக்கு மாற்றி இருக்கின்ற பெருமை அரசியலையே லாவணி பாடுகின்ற அரசியல் என்கிற நிலையிலிருந்து மாற்றி,
கருத்தியல் சார்ந்து விவாதிக்க கூடிய ஒரு புதிய கோணத்தை அல்லது புதிய களத்தை புதிய அரசியல் தளத்தை ஒரு இயக்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் என்பதை பெருமையோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.