Categories
தேசிய செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்….? வெளியான முக்கிய தகவல்…!!!!

இன்று நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் 2022 – 23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  நடைபெற உள்ளது. இதில் மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிகழ்த்த இருக்கிறார். இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருக்கும் முக்கிய வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இன்று  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக “நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1000, முதியோர் ஓய்வு ஊதியம் ரூ.1,500, கல்வித்துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல்” போன்ற வாக்குறுதிகளை குறிப்பிட்டு சொல்லலாம். இதில் இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ1,000  வழங்கப்படும் என்கிற அறிவிப்பு இன்று நடக்கும் பட்ஜெட் உரையில் இடம் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்த வீடு வைத்துள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமை தொகை கிடைக்காது. மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இது கிடைக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |