Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. இன்று காலை 11 மணிக்கு…. பகீர் கிளப்பும் அண்ணாமலை…. அரசியலில் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார். அதனால் திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை, இரண்டு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஜூன் முதல் வாரத்தில் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரிகளைக் குறைக்க நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது நான்கு நாட்களில் இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறினார். இந்நிலையில் இன்று காலை பதினோரு மணி அளவில் சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories

Tech |