ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டியர் கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, வ.உ.சி சிதம்பரனார் என பல வீரத்திருமகன்களை நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த மண் தமிழ்நாடு ஆகும். ஆனால் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக பங்களிப்பினை பறைசாற்றும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் மிக்க தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் குடியரசு தின கொண்டாட்டத்தில் மாநில அரசின் சார்பில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் மக்களின் பார்வைக்காக அந்த அலங்கார ஊர்தி அனுப்பப்படும் என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.