தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து.
நேற்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்புதிய கல்விக் கொள்கை தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறை அமைச்சர் , மூத்த அமைச்சர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை… தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நிச்சயமாக பின்பற்றப்பட மாட்டாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என்ற ஒரு விஷயத்தை மிக தெளிவாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய்வதற்கு ஒரு கமிட்டி என்பது அமைக்கப்படும் என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிட்டியில் யார் யாரெல்லாம் இடம் பெறுவார் ? என்ற விவரம் வரை முடிவு செய்யவில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய கமிட்டி உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை பொருத்தவரை பார்த்தோமென்றால் மும்மொழிக் கொள்கையை தாண்டி பிற பாதகமான விஷயங்கள் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். உயர்கல்வியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு, பள்ளிக்கல்வித் துறையை பொருத்தவரை 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான பொதுவான தேர்வு இது போன்ற பல்வேறு பாதகமான விஷயங்கள் உள்ளதாக எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் கருத்தை முன்வைத்து வரும் நிலையில் இதனை ஆராய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளது.