கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட் கடை திறக்க கோரி வியாபாரிகள் தரப்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10 தேதி வரும் திங்கட்கிழமை காய்கறி மற்றும் பூ மார்க்கெட், பழ மார்க்கெட் மூடப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுககுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, சென்னை கோயம்பேடு அனைத்து கூட்டமைப்பு, காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், பூ மார்க்கெட், நவதானிய மார்க்கெட் உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு… தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி மார்க்கெட் அனைத்துமே திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு எங்களுடைய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம். குறிப்பாக மார்க்கெட் திறக்கின்ற போது அரசு விதிகளுக்கு இணங்க அனைத்து வியாபாரிகளும் தொழிலாளர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை சோதனை செய்து முழுமையாக கட்டமைப்போடு அரசு விதிகளை மீறாமல் கடைகளை நடத்துவதற்கு உறுதி ஏற்கிறோம். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் திறப்பதற்கு மரியாதைக்குரிய துணை முதலமைச்சர் அவர்களை இரண்டு முறை நாங்கள் நேரடியாக சந்தித்து பேசி இருக்கிறோம். இரண்டாவது முறை கோட்டையில் பேசிய போது எங்களுக்கு எல்லாம் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.இருந்தும் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படாமல் கிடைப்பின் போடப்பட்டது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து பேரமைப்பு அரசுக்கு முறையிட்டு கொண்டிருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறோம். அரசு கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் பல்வேறு போராட்டங்களை நிர்வாகிகள் சொன்னாலும் கூட கொரோனா காலத்தில் கூட்டங்களை சாலைகளில் சேர்க்காமல் முதற்கட்டமாக வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் தேதி அன்று தமிழகம் தழுவிய அளவில் காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், பூ மார்க்கெட்களை முழுமையாக அடைத்து எங்களுடைய போராட்டத்தை பதிவு செய்கிறோம்.
வருகின்ற திங்கள் 10ஆம் தேதிக்கு பிறகோ அல்லது அதற்கு முன்னதாகவே அரசு எங்களை அழைத்து தேதி கோயம்பேடு மார்க்கெட் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அதை தவிர்க்கின்ற பட்சத்தில் அதே திங்கட்கிழமை அன்று அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும். தொடர்ந்து கடையடைப்பு போராட்டம், அதற்கு முழுமையாக ஆதரவாக தமிழகம் தழுவிய அளவில் அனைத்து கடைகளும் அடைப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழு ஆதரவளிக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.