Categories
மாநில செய்திகள்

தமிழகம் ஆசிரியர்களுக்கு…. சம்பளம் பிடித்தம் செய்யப்படும்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழக ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன் பள்ளிக்கு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பள்ளி கல்வித்துறை பிறப்பித்திருந்தது. ஆனாலும் சரியான நேரத்துக்கு அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையில் பள்ளிகளில் ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை புதிய நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. அதன்படி ஆசிரியர்களின் வருகை பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை கொண்டு வர பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோர்தல் மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர்.

ஆனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் காலவிரயமும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வையாவழி கடந்த மே மாதம் 25ஆம் தேதி அன்று ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் உள்ள பள்ளி கல்லூரி செயலி மூலம் விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். TNSED- Schools என்ற செயலி மூலம் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ள பல்வேறு விடுப்புகளுக்கு அனுமதி கோருதல் போன்றவற்றை ஆசிரியர்கள் மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த செயலி மூலம் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய பள்ளி கல்லூரி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயலில் காலை 10 மணிக்குள் ஆசிரியர்கள் தங்கள் வருகை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தகவல் உண்மையல்ல என்று ஒரு செய்தி பரவி வருகிறது. எனவே இது குறித்து பள்ளி கல்வித்துறை தரப்பில் உரிய விளக்க அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

Categories

Tech |