செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இது ஆன்மீக பூமி என்பார்கள், ஒருபுறம் திராவிட மண் என்பார்கள், எது எப்படி இருந்தாலும் இரண்டும் ஒன்றுசேர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பிளவு இல்லாமல், எந்த விதமான சச்சரவு இல்லாமல் அரவணைத்து அழைத்துச் செல்ல முற்படுகின்றார். அவருடைய இந்த சீரிய நோக்கத்திற்கு அனைத்துக் கட்சியினரும்…. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
நம்மைப்பொருத்த வரையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது மாண்புமிகு மறைந்தும், மறையாமல் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம். அதனுடைய தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமே ஆகம விதிப்படி அர்ச்சகர்களாக பயிற்சி பெற்றவர்களை திருக்கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கலாம்.
அதில் ஜாதி வேறுபாடு இல்லை என்று அறிவித்ததை தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தற்போது 24 பேருக்கு பல்வேறு பிரிவினை சார்ந்தவர்களுக்கு அர்ச்சனை செய்வதற்கு உண்டான பணியை நியமன ஆணை வழங்கி இருக்கிறார்கள். அது சிறந்த முறையில், நல்ல முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மேலும் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சகர்கள் பள்ளி, வேதப் பள்ளி, அதேபோல் இசை பள்ளி போன்றவை அதிக அளவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துவக்க இருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த பயிற்சி பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு கூட இதுவரை ரூபாய் 1,000 தான் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது 3,000 ரூபாய் அளவிற்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட இருக்கின்றார்கள்.
புதிய பள்ளிகள் துவங்கும் அதே நேரத்தில் பழைய பள்ளிகளை மேம்படுத்துவதும், அந்தப் பள்ளிகளை புனரமைப்பதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார்கள். ஆகவே அதிக அளவிற்கு அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பிரபந்த விண்ணப்பர்கள், இசைப் பள்ளியை சார்ந்தவர்கள்…. இசைக்கல்லூரியை சார்ந்தவர்களை அதிக அளவிற்கு தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு உண்டான முயற்சியை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு இருக்கின்றார்.