Categories
மாநில செய்திகள்

தமிழகம் இன்னும் 6 மாதங்களில் போதை இல்லா மாநிலம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்திற்குள் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளின் மீட்கப்பட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் விரைவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் உட்பட்ட பகுதிகள் போதைப்பொருட்கள் இல்லாதவையாக மாற்றப்படும் . அடுத்து ஆறு மாதத்திற்குள் போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும். தற்போது கஞ்சா கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவது தெரியவரும் நிலையில் அதனை தடுக்க ரயில்களில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு கஞ்சா கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |