தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காலியாக இருக்கக்கூடிய 56 சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் பீகார் மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சம்பந்தமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மூத்த அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை எப்படி நடத்துவது ? இதற்கான சாத்தியக்கூறுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி இருக்கின்றது ? என்று ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே நேற்றைய தினம் செப்டம்பர் 7ஆம் தேதி வரை தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை நடத்த தற்போது முடிவு எடுத்திருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், உரிய நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை வெளியாகும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.