இந்திய வானிலை ஆய்வு மையம் ஹாஹீன்புயல் காரணமாக தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு வருகின்ற 4ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இருக்கிறது. இதற்கு காயின் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக வருகின்ற 4 ஆம் தேதி வரை தமிழகம், குஜராத், பீகார், மேற்கு வங்கம், போன்ற 7 மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது.
இதைப்பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் அடுத்த 6 மணி நேரத்திற்கு அதிதீவிர புயலாக மாறி இருக்கிறது. அதனால் வரும் 4 ஆம் தேதி வரை பீகார், மேற்கு வங்கம், சிக்கிம், தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் உள் பகுதிகள் உள்பட தமிழகம், கேரளா மாநிலங்களில் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கக்கூடும்.
எனவே 1-ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை கனமழை பெய்யும். மேலும் வருகின்ற 4 ஆம் தேதி காலை வரை குஜராத் கடல் பகுதி மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் ஓமன் வளைகுடா மற்றும் வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அளித்துள்ளது. இப்போது வட கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஹாஹுன் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருவாகி பின்னர் இந்திய கடல் பகுதியை விட்டு விலகி நகர தொடங்கிவிடும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.