Categories
மாநில செய்திகள்

“தமிழகம் ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனையை இழந்து விட்டது”…. நடிகர் நாஞ்சில் விஜயன் இரங்கல்…..!!!!!

கால் பந்து வீராங்கனை பிரியா இறப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் படி 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். சென்னை வியாசா்பாடியை சோ்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (17). இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப்பிரிவில் பயின்று வந்தார். அத்துடன் இவர் மாநில கால் பந்து விளையாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா இறப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “மூட்டு அறுவைசிகிச்சை நடைபெற்றபோது போடப்பட்ட கட்டால் பிரியா உடலில் ரத்தஓட்டம் தடைபட்டது.

மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியாவின் மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. தற்போது கவனக்குறைவாகயிருந்த 2 மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரியாவின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ரூ[ஆய்.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகம் ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனையை இழந்து விட்டதாக பிரியாவின் மரணம் பற்றி நகைச்சுவை நடிகரான நாஞ்சில்விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |