Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் சூப்பரா ஆகிடுச்சு…! நான் சொன்ன ஆலோசனை தான்… காலரை தூக்கி விடும் எடப்பாடி ..!!

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழக முதல்வர் நேற்று தொடங்கினார். அதில் பேசிய அவர்,  சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை மக்கள் சக்தியோடு பெரும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தொடக்கிவைத்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். சுமார் 31 ஆண்டுகள் ஆட்சி நடத்தி அதிகம் ஆட்சி புரிந்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து சிறப்பான முறையில் அம்மாவின் அரசு ஆட்சி புரிகிறது. இந்த 31 வருடங்களில் ஏராளமான திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளோம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட கனவு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவை அம்மாவின் அரசு என் தலைமையில் நடக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுத்துகின்றது. அம்மாவின் மறைவிற்குப் பிறகு இந்த அரசு ஒரு மாதம் இருக்குமா? ஆறுமாதம் இருக்குமா? அல்லது ஒரு வருஷம் இருக்குமா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருந்தனர்.

இன்று கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களின் உதவியோடு நான்காம் வருடம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடங்களில் கடுமையான சோதனைகள் பலவற்றை நாங்கள் கடந்து வந்துள்ளோம். ஆட்சி பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி நிலவியது. குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத சூழல். அதையும் சரி செய்து மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் குடிநீர் வழங்கியது எங்கள் அரசு. அதன்பிறகு புயல்.

புயலினால் வாழ்வாதாரம் இழந்த மக்கள் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் எமது அரசு துரிதமாக பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் அமைச்சர்களை அனுப்பி வைத்து களத்தில் இறங்கி இந்திய வரலாற்றில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நிவாரண பணிகளை முடித்துவிட்டு சிறப்பான முறையில் மக்களுக்கான உதவிகளை செய்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கினோம்.

அதன் பிறகு கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய கடுமையான நோய். 2020 மார்ச்சில் பரவத் தொடங்கிய அந்த நோய் இதுவரை இருந்து கொண்டிருக்கிறது. அந்த தொற்று நோயையும் முழுமையாக கட்டுப்படுத்தும் சூழலை நமது ஆட்சியில் பார்க்கிறோம். இன்று உலக சுகாதார துறை அமைப்பு , மத்திய சுகாதாரத்துறை,  மத்திய நிபுணர் குழு ஒருங்கிணைந்து அவர்கள் கூறும் ஆலோசனைப்படி நமது தமிழக அரசு சிறந்த முறையில் திறமையாக செயலாற்றுகிறது.

அதன் காரணமாக இன்று கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. நான் ஒவ்வொரு மாவட்டமாக சென்றேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது வழங்கப்பட்ட ஆலோசனைகளை கேட்டு மாவட்ட நிர்வாகங்களும் சுகாதாரத் துறையும் சிறப்பாக செயல்பட்டதன் விளைவு தான் தமிழகத்தில் கொரோனா குறைய தொடங்கியது என முதல்வர் பெருமிதம் கொண்டார்.

Categories

Tech |