செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தடுப்பூசி போட கோவிட் செயலியை பயன்படுத்த இப்போ ஆன்லைன்ல போக வேண்டிய அவசியமே இல்ல, நம்ம வந்து ஆட்களை தேடி போகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 15முதல் 18வயது வரை 33,20,000ற்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இதில் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்த 26 லட்சம் பேருக்கும் நாமே உடனடியாக கண்டறிந்து போட இருக்கிறோம். மீதி இருக்கிற 8, 9 லட்சம் பேரையும் யார் என்பதை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த உள்ளோம்.
ஆன்லைன்ல பதிவு செய்தவர்களையும் விட போவது இல்லை. அதற்காக இது எப்படி இருந்தாலும் கூட முழுமையாக ஒரு மாத காலம் என்று டார்கெட் வைத்திருக்கிறோம். ஒரு மாதத்திற்குள் இந்த 15 லிருந்து 18 வயதுக்கு உள்ளே இருக்கிறவர்களை முதல் டோஸ் தடுப்பூசி போட இருக்கிறோம். அதுபோன்று 10ஆம் தேதி மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இவர்கள் யாருக்கெல்லாம் தடுப்பூசி போட்டு 9 மாதம் ஆகிவிட்டதோ அவர்களுக்கெல்லாம் 10ஆம் தேதி பூஸ்டர் தடுப்பூசியும் சென்னையில் தொடங்கிவைக்கப்படும்.
மத்திய அமைச்சர் நடத்திய ஆலோசனையில் இந்தியா முழுவதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு முழுவதும் எல்லா விஷயங்களிலும் நல்ல பண்ணியிருக்காங்க, தடுப்பூசி போடுவதில் 86% முதல் டோஸ் கடந்து இருக்கின்றார்கள், இரண்டாவது டோஸ் 60 சதவீதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அதேபோன்று ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட பணிகளில் மாற்றுத்திறனாளிகள், கர்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இதில் எல்லாமே தமிழ்நாடு முதல் இடம் இருக்கிறது. இதெல்லாம் பாராட்டி கூறியுள்ளார்கள் என தெரிவித்தார்.