உக்ரைன் நாட்டில் படித்து வந்த 3 தமிழக மாணவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டு உள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் உக்ரைனில் தவித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உக்ரைனில் தவித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இவர்களில் கவிதா, காவிய பிரியா, பிரியதர்ஷினி ஆகியோரை தமிழக அரசு மீட்டுள்ளது. மேலும் ஹரி ராமச்சந்திரன், உதயகுமார், கோபிகாஸ்ரீ , தரனேஷ், அபுசுகைல் ஆகிய 5 பேரும் உக்ரைனில் தவித்து வருகின்றனர்.
இவர்களில் அபுசுகைல் எந்த உதவியும் கிடைக்காமல் கார்கில் பகுதியில் தவித்து தருவதாகவும் அவரை மீட்டுத் தருமாறும் தமிழக அரசுக்கு அபுசுகைலின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து உதயகுமாரின் பாஸ்போர்ட்டை கல்லூரி நிர்வாகம் தர மறுக்கிறது எனவும், அதனால் தன் மகன் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் உதயகுமாரின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். மேலும் தன் மகனைப் போல் தவித்து வரும் மற்ற மாணவர்களையும் விரைவில் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.