Categories
மாநில செய்திகள்

தமிழகம் நோக்கி வரும் அடுத்த புயல்… மக்களுக்கு அபாய எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கரையை கடந்து உள்ளது. இருந்தாலும் அதன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிலப்பரப்பு வழியாக நிவர் புயல் வலுவிழந்தது. அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தற்போது புதுச்சேரியில் இருந்து 85 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மேலும் புயல் காரணமாக மூன்று பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |