தமிழகம் பணக்கார மாநிலம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
தற்போது 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துள்ள போது அதாவது, 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்று வெள்ளை அறிக்கை பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து தமிழகம் பணக்கார மாநிலம் என்று கூறினார் சுமார் 29 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு தமிழகம் உரிமையாளர். அதில் 2.05 லட்சம் ஹெக்டேர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பணக்கார மாநிலம். அளவில்லா சொத்து நம்மிடம் உள்ளது. ஆட்சியை ஒழுங்காக நடத்தினால், உட்கட்டமைப்பு மேம்படுத்தினால் வருவாயைப் பெறலாம் எனக்கூறினார்.