Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்‍குப் பருவமழை இயல்பைவிட 8% அதிகம் …!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடற்கரைப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மனம் பூண்டியில் 15 சென்டி மீட்டரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 16 4சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்த வரையில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை பொருத்தவரையில் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பொருத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் கூடும். வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் மாதம் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மழையின் அளவு 452 புள்ளி மில்லி மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 419 மில்லி மீட்டர். இது இயல்பை விட எட்டு சதவிகிதம் அதிகம் என தெரிவித்தார்.

Categories

Tech |