Categories
மாநில செய்திகள்

தமிழகம் புதுச்சேரியில் மழைக்‍கு வாய்ப்பு …!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளதால் தமிழக புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாகவும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டலகீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் மேலும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடல் பகுதியில் வரும் 14-ம் தேதி உருவாகக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 13 சென்டிமீட்டரும், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.3 மீட்டர் வரை எழுப்பக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |