தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் மக்களை கவரும் வகையிலான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திற்கு வருகை தந்தார். அப்போது திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த முறை புதுச்சேரி வந்த போது மக்கள் மாற்றத்தை விரும்பியதை கண்டேன். அந்த மாற்றத்தை பாஜக கொண்டுவரும் என அவர் கூறியுள்ளார்.