Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக

15.9 2022 மற்றும் 16.9 2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17.9. 2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18.9 2022 மற்றும் 19.9.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும்.

அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 -27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி, உதகையில் தலா 5 சென்டிமீட்டர், தேவாலா, கெட்டி முரார்பாளையத்தில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Categories

Tech |