Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முன்னேறும்….! ”ஸ்டாலின் சூப்பர்”…. எடப்பாடி அப்படியில்லை….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சட்ட ஒழுங்கை பற்றி ஒரு முக்கியமான கேள்வி கேட்டீர்கள்…. நான் கேட்கிறேன்…

ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த மாதிரி, தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொலை செய்தார்களே…  அது எப்படி தெரியும் என்றால், டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்னார் இந்த நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தவர். அந்த மாதிரி ஒரு சட்ட ஒழுங்கு இப்ப பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள், நமது திராவிட முன்னேற்ற கழகம் தவறாக நடந்து கொள்கிறது என்பதை சுட்டிக்காட்டுவோம், எதாவது சொல்லுவோம்.

அப்படி ஏதாவது நடந்ததா ?  என்ன சட்ட ஒழுங்கு கெட்டுப் போச்சு இப்போ. போலீஸ் மீது ரவுடிகள் தாக்குதல் எடப்பாடி இருக்கும் போது இது மாதிரி ஏகப்பட்ட நிகழ்வுகள்  நடந்து இருக்கு, ரவுடிகள் தாக்குதல், போலீஸ் தாக்குதல், போலீசை சுட்டுக் கொல்வது, இதன் தொடர்ச்சியாகத்தான் பார்த்து கொண்டிருக்கிறோம். அதுபோன்று துப்பாக்கி சூட்டை நீங்கள் உலகத்திலே பார்த்திருக்க முடியாது.. தூத்துக்குடியில் ஏறிநின்று சூட்டது போல்.  ஒன்னும் நடக்கலையே, இன்றைக்கும் முதல்வர்….

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினரை கோவையிலே அழைத்து உட்கார வைத்து அழகு பார்க்கும் சூழ்நிலையை பாரபட்சமில்லாமல் எடுத்து போகின்ற காட்சியை தமிழகம் காணுகிறது.நான் ஏதோ அவரை புகழ வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இதையெல்லாம் முன்னேற்ற பாதையில் எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அதை திரு ஸ்டாலின் தமிழக முதல்வர் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |