தமிழகம் முழுவதிலும் சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மழை காரணமாக சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுக்க சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் கோவையில் 170 ரூபாய், மதுரையில் 160 ரூபாய்க்கும், திண்டுக்கல்லில் 145 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைவிட சற்று குறைவாக கோயம்பேட்டில் 130 ரூபாய்க்கும், திருச்சியில் 120 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.