Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வனத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனைமலை மற்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள 200 பரப்பிலான மரங்கள் அகற்றப் பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு நீர்வளத்துறை தாக்கல் செய்திருந்த அறிக்கையில், மாநிலம் முழுதும் நீர் நிலைகளின் அருகில் 1.93 ஹெக்டேர் பரப்பிலான கருவேல மரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 70 ஆயிரத்து 294 ஹெக்டேர் பரப்பிலான கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள மரங்களை டெண்டர் மூலம் அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை தாக்கல் செய்திருந்த அறிக்கையில், கிராமப்புறங்களில் 2700 ஹெக்டேர் பரப்பிலான கருவேல மரங்கள் 4.74 கோடி ரூபாய் செலவில் அகற்றப்பட்டுள்ளது.

அதன்பின் 168 ஹெக்டேர் பரப்பிலான நிலப்பரப்பில் நாட்டு மரங்கள் நடவு செய்யப்ப ட்டுள்ளது என  குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு நீதிபதிகள் வனத்துறையினர் வனப்பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்கள். மேலும் கருவேல மரங்களை டெண்டர் மூலம் மொத்தமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை  சமர்ப்பிக்க வேண்டும் எனவும், விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர்.

Categories

Tech |