Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அங்கன்வாடி உதவியாளர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58 இலிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை அடுத்து சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பயன்படும் வண்ணம் அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 இலிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடி உதவியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |