தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த ஐந்து மாதத்திற்கு இலவசமாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ்,ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஏற்கனவே வழங்கப்படும் 5 கிலோ அரிசியை விட கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் இந்திய உணவுக் கழக இயக்குனர் நசீம் தெரிவித்துள்ளார்.