தமிழகம்முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அனைத்து காவல் துறைஅதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் ஆகியவற்றில் கூடுதல்கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் முதல்வரின் சாலை பயணத்துக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டபோது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் காரும் நிறுத்தப்பட்டதற்கு நீதிமன்றம் கண்டனம்தெரிவித்தது. எனவே, முக்கியபிரமுகர்களின் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்தும்போது, மற்ற முக்கிய பிரமுகர்கள் பாதிக்கப்படாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் முக்கிய சாலைகளில் தீவிரவாகன சோதனைகள் நடத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காத நபர்கள், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.