தமிழகத்தில் மனித உரிமைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி வசூல் செய்வோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மனித உரிமைகள் மீறப்படும் போது,அது குறித்து உரிய விசாரணை நடத்தி அரசுக்கு தக்க பரிந்துரை செய்ய டெல்லியில் தேசிய மனித உரிமை கமிஷன் உள்ளது. அதனைப் போலவே தமிழகத்திலும் உள்ளது. இருந்தாலும் சில தனியார் அமைப்பினர் தங்களை தேசிய மற்றும் மாநில மனித உரிமை கமிஷன் உடன் தொடர்பு படுத்தி போலி அடையாள அட்டைகள் வழங்கி வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒரு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற மனித உரிமை அமைப்பை தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. வாகனங்களில் மனித உரிமை நிர்வாகிகள் போல ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருகிறார்கள். அவர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர், ஐஜி-க்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.