Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அடுத்த அதிரடி….. இனி யாரும் தப்ப முடியாது…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கினால் அவரின் உறவினர்களின் சொத்துக்களையும் முடக்க டி ஜே பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆன்லைன் மூலமாக அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் முதல் தொடர்புடைய மாஃபியாக்கள் வரை அனைவருக்கும் குறித்த விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும் உளவுத்துறை உதவியுடன் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறும் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவது மட்டுமல்லாமல் உறவினர்களின் சொத்துக்களையும் முடக்க உத்தரவிடப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் நோக்கத்தில் எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் எனவும் கப்பல்களில் போதை பொருள் கடத்தி வருவதை தடுக்க ரோந்து படகுகள் மூலமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.

குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போதைப்பொருள் விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது.

Categories

Tech |