Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிகாரிகளுக்கு…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க .ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவை தரும். மழைக்காலத்தில் புயல் பாதிப்புகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். வர்தா, கஜா, நீலம், புரவி, நிவர் போன்ற புயல்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதனால் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்புகளை சீரமைக்கும் பணிகளும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியது, நீரினால் பாதிப்புகள் ஏற்படக் கூடிய அசாதாரண சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் ஒரு நல்ல நிர்வாகத்திற்கு சான்றாக விளங்குவது இந்த காலங்களில் மக்களை எந்தவித சேதமும் இல்லாமல் காப்பாற்றுகிறது என்பதை பொறுத்தே அமையும். அதனைத் தொடர்ந்து புயல் மற்றும் வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு முறையாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக குடிசைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை நீடிக்கும். எனவே கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட புயல் பாதிப்பை கண்டறிந்து எதிர்காலத்தில் வரும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும். மேலும் பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு மையமானது 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அனைத்து பகுதியிலும் சிறப்பு கண்காணிப்பாளர்கள் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். மேலும் நிவாரண பொருட்கள் அனைத்தும் தாமதம் இல்லாமல் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட பின் உடனடியாக மின் வினியோகத்தை சரி செய்ய வேண்டும் என்பதை முன்னுரிமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |