நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள கோப்புகளை, பணிகளை விரைந்து முடிக்கும் விதமாக அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் செயலாளர் ஹன்ஸ்ட் ராஜ் வர்மா பிறப்பித்துள்ள உத்தரவில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறைகளின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10:30 ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் அவர்களது வருகை குறித்த அறிக்கையை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.