கொரோனா ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடைவிதித்தது. இந்தத் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்தது. அதாவது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என்றும் இது தமிழக அரசின் கொள்கை சம்மந்தமான முடிவு என்றும் கூறியிருந்ததது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் இடைக்காலத் தடை தொடரும் என்றும் அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் வரும் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.