தமிழகம் முழுவதும் இருக்கும் விவசாயிகள், ஏழைகள் தங்களது நகைகளை குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற வசதியாக இருப்பது கூட்டுறவு வங்கிகள். தற்போது தஞ்சாவூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற்று வரும் இந்த காலத்தில் கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு பெருமளவில் பலனாக இருந்து வருகிறது. அன்றாடம் உழைப்பை நம்பி இருக்கும் பொது மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் பெற்று பலனடைந்து, தங்களது வாழ்க்கையை ஓட்டி வந்தனர்.
இந்நிலையில் நிலையில் ஒட்டுமொத்த விவசாயிகள், மக்கள், ஏழைகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் கூட்டுறவு வங்கி முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.