Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி அறிவிப்பு – இதுவரை இல்லாத புது முயற்சி …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து வெளிப்பட்டிருக்கிறது.

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.முதல் முறையாக கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப முறையை ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் அரசு கல்லூரிகளுக்கு மட்டும்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். தனியார் கல்லூரிகளுக்கோ அல்லது அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கோ இந்த விண்ணப்பங்கள் பொருந்தும் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடவில்லை. எனவே தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும்,   அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் அரசு என்று அழைக்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கும் இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் போட வேண்டிய அவசியம் இல்லை.  அனைத்து கல்லூரிக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம்  என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

 இணையம்:

அரசு கலை கல்லூரிக்கு: www.tngasa.in, www.tndceonline.org

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு:  www.tngpptc.in, www.tngptc.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |