கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளை கருத்தில்கொண்டு பள்ளிகளில் சத்துணவு மாணவர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசு சார்பில் ஒரு உத்தரவை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது
அதில், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் தாமதம் ஆவதால் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அரிசி, பருப்பு வழங்க வேண்டும் என்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.