தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கிகள் என்பது பிரதானமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பயனுள்ள ஒரு விஷயமாகும். காரணம் என்னவென்றால் விவசாயிகள் தங்களுடைய நகைகளை விவசாய பயன்பாட்டிற்காக குறைந்த வட்டியில் அங்குதான் அடகு வைப்பார்கள். அதேபோன்று பொதுமக்களும் பெரிய வங்கிகள் வங்கிகளை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்லாமல் கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளை தான் பயன்படுத்துவார்கள்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மட்டும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வங்கித் துறை அதிகாரி சொல்லும் போது, வாய்மொழி உத்தரவு மட்டுமே தற்போது வந்திருக்கிறது. அது எழுத்துபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லைஎன்று தெரிவித்திருக்கின்றார்.
இன்று காலையில் இருந்து நகை கடன் வழங்கப்படாமல் இருக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் தற்போது தான் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்துல நகை கடன் வழங்கப்படாதது மிகப்பெரிய விஷயம். ஆகையால் நகை கடையை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது பாமர மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.