Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி…. அரசின் முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி …!!

தனியார் கல்லூரிகள் 3 தவணையாக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து பழனியப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி மகாதேவன் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தார். கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கப்படும் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக, தவணை முறையில் கட்டணம் வசூலிக்க அரசிடம் மனு கொடுங்கள், தவணை முறையில் பணம் வசூலிக்க தமிழக  அரசு முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர விட்டாலும், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில் தமிழக  உயர் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தனியார் காலுறைகள் மூன்று தவணைகளாக கல்வி கட்டணத்தை வசூல் செய்து கொள்ளலாம். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம், டிசம்பர் மாதம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் என்ற மூன்று தவணைகளில் தனியார் சுயநிதி கல்லூரிகள் மட்டும்  வசூல் செய்யலாம் தமிழக அரசு பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |