தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் கேட்டறிந்தார்.
இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் மாவட்டம் வாரியாக சுகாதார கட்டமைப்புக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் எடுத்துரைத்தார். அதேபோல ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட களநிலவரங்களை கேட்டறிந்தார். இதில் பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் தளர்வு வழங் குவது பாதுகாப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்ததாக ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.