தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது.
இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பாலியல் புகார்களை மாணவிகள் தெரிவிக்கும்போது மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என பள்ளிகளுக்கு எச்சரித்துள்ளார். பள்ளியில் பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் போக்சோ, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் புகார் அளிக்க அறிவிக்கப்பட்ட 14417 என்ற உதவி எண் வரும் காலங்களில் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சிடப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.