Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசியர்களுக்கும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் நிலையை பரிசோதித்து அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் பரவலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |