தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜனவரி 7-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதற்கு மாற்றாக அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும்.
ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதனால் இந்த மாதம் 7ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறையாக இருந்தாலும் வேலை நாளாக அறிவித்து உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜனவரி 15ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.