தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது நாள்தோறும் பல்வேறு இடங்களிலும் போதைப்பொருட்கள் பறிமுதல் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் போதை பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு ஆதரவும் அளிக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை 10.30 மணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நேற்று முதல்வர் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்ட நிலையில், பள்ளிகளில் நாளை முதல் 19ம் தேதி வரை போதைப்பொருள் விழிப்புணர்வை கடைபிடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.