தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளியானது அதிகரித்துள்ளது. இந்த கற்றல் இழப்பை சரி செய்வதற்காக தமிழக அரசு 1 முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து செயல்முறைகளை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணம் எழுத்தும் சார்ந்த இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து வருகிற 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி அறைக்குள் 40 நபர்கள் மட்டுமே பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வருகிற அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை என்று மூன்று நாட்கள் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதில் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.