தமிழகத்தில் கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று உணவுத்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் ஒரு கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்ட குழந்தை ஒன்று மயக்கம் போட்டு கீழே விழுந்தது. இதையடுத்து அந்தக் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த போதும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கெட்டுப்போன உணவை சாப்பிடதன் காரணமாக குழந்தையின் மயக்கம் போட்டு விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை சாப்பிட்ட சாக்லேட்டை பரிசோதித்துப் பார்த்தபோது அந்த சாக்லேட் காலாவதி ஆகி இருப்பது தெரியவந்தது.
பின்னர் குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு சோதனை நடத்தினர். அதில் 15 லட்சம் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் தாங்கள் வாங்கும் பொருளின் காலாவதி தேதியை பார்த்து பின்னர் வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். முக்கியமாக குழந்தைகளுக்கு நாம் வாங்கி கொடுக்கும் பொருள்களில் காலாவதி தேதியை பரிசோதிப்பது மிகவும் முக்கியம்.