Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதேசமயம் டோக்கன் வழங்கும் பணியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 13ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நியாய விலை கடைகளில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் வசதிக்காக ஜனவரி 13ஆம் தேதியும் தமிழக முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |