தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளுடன் தங்கு வதற்கு ஏதுவாக பள்ளிகள் திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், மின்கசிவு ஏற்படாத வகையிலும், எந்த ஒரு மின் கம்பிகள் ஆபத்தான வகையில் தொங்காமல் இருப்பது உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.