Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அமலாகும் கடும் ஊரடங்கு?…. நிபுணர் குழுவின் முடிவு என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” தற்போது நான்காவது அலையாக வந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது.

அதில் முதலாவதாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி முகாம்களை சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும். இரண்டாவதாக, முதல் டோஸ் போட்டு கொள்ளாத 50 லட்சம் பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத 1.32 கோடி பேரும் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். மூன்றாவதாக, மாநிலத்தில் கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்பட வேண்டுமானால் முதலமைச்சருக்கு நிபுணர்குழு பரிந்துரை செய்யும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

நிபுணர்கள் எச்சரிக்கையின் படி, ஜூன் மாதத்தில் தமிழகத்தில் நான்காவது அலை பரவினால் முக்கிய கட்டுப்பாடுகளை நிபுணர்குழு பரிந்துரைக்கும். அதிலும் குறிப்பாக ஜூன் அல்லது ஜூலையில் இந்தியாவில் மூன்றாவது அலையை விட நான்காவது அலை உச்சம் அடைந்து இறுதிவரை தாக்குப்பிடிக்கும் என்பதால் முன்னதாக கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை போலவே மீண்டும் ஊரடங்கு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைத்துக்கும் பொதுமக்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |