தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமான அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது என விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அம்மா பெயரில் உள்ள திட்டங்களை மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.