தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படம், திருக்குறள் அந்த திருக்குறளுக்கான விளக்கவுரையையும் பயணிகள் பார்வையில் தென்படும் வகையில் இடம் பெற வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அரசு பேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஓரிரு நாட்களில் இடம்பெறும் என்றும், திருக்குறளும் அதன் விளக்கவுரையும் பேருந்துகளை மீண்டும் அலங்கரிக்கும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.