Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் நாளை….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகளில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசுவது குறித்தும் ஆலோசனை செய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், கவுன்சிலர் உள்ளிட்டவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |